மாற்றுத் திறனாளிகள் நிலையான அபிவிருத்தி அடைந்து தற்சார்பு பொருளாதாரத்தில் வாழ நீங்களும் உதவலாம். தொடர்புக்கு WE CAN @ 077 6576 807 | wecancj@gmail.com
XXXxxx
01.09.2020 : வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட பல விடயங்களில் வளாகத்தின் பெயர் விளங்குகிறது. இன்றையநாளின் ஆரம்பமே பசுமைக்கான நடுகையில் தொடர்ந்தது. விரிவுரையாளர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் தானே கொண்டுவந்து மலைவேம்பு கன்றை நாட்டினார். தொடர்ந்து எங்கள் கனவுகளைச் சுவர்களில் வரைந்தோம். இயற்கையோடு இணைந்த வாழ்வில் தீராக் காதல் கொண்ட நண்பர்கள் குழுவாய் வளர்ந்தது இன்றைய நாள். இன்று இவ்வுலகில் நினைவுகளில் உறவு மீனா அவர்களின் பெயரில் வளாகத்தில் ஒரு புதிய கடையை ஆரம்பித்தோம். முழுமையாகக் கட்டியமைக்க முன்பே பல நிகழ்வுகளைச் செய்த மண்டபத்திற்கான அன்பளிப்புப் பெயர் பலகையை இன்றுதான் காட்சிப்படுத்தினோம். கச்சான் பட்டர் தயாரிப்பும் விற்பனையும் தொடரும் என்பதை அறிமுகம் செய்கிறோம்.
அழகிய நினைவுகளில் கனவுகள் வளர
01.09.2020 : வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட பல விடயங்களில் வளாகத்தின் பெயர் விளங்குகிறது. இன்றையநாளின் ஆரம்பமே பசுமைக்கான நடுகையில் தொடர்ந்தது. விரிவுரையாளர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் தானே கொண்டுவந்து மலைவேம்பு கன்றை நாட்டினார். தொடர்ந்து எங்கள் கனவுகளைச் சுவர்களில் வரைந்தோம். இயற்கையோடு இணைந்த வாழ்வில் தீராக் காதல் கொண்ட நண்பர்கள் குழுவாய் வளர்ந்தது இன்றைய நாள். இன்று இவ்வுலகில் நினைவுகளில் உறவு மீனா அவர்களின் பெயரில் வளாகத்தில் ஒரு புதிய கடையை ஆரம்பித்தோம். முழுமையாகக் கட்டியமைக்க முன்பே பல நிகழ்வுகளைச் செய்த மண்டபத்திற்கான அன்பளிப்புப் பெயர் பலகையை இன்றுதான் காட்சிப்படுத்தினோம். கச்சான் பட்டர் தயாரிப்பும் விற்பனையும் தொடரும் என்பதை அறிமுகம் செய்கிறோம்.
மீனாவுக்கு அன்புகளுடன்
மீனா
அமெரிக்காவில் உயர் கல்வி கற்று வாழ்ந்திருக்கிறார். சிங்ப்பூரை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தன்னை ஒருவரும் இல்லாத தனி நபராகவே சொல்லி இருக்கிறார். 2016இல் இளம் வயதிலேயே நோய் காரணமாக உலகை விட்டு நீங்கிவிட்டார்.
தமிழ் மீது அதிகம் பற்றுக் கொண்டவர். தனது தமிழ் நண்பர்களை தமிழில் பேசுங்கள், தொலைபேசியில் கூட தமிழில் எழுதுங்கள் என்று கேட்டு கொண்டிருப்பார்.
இவர் ஒரு பெண்நிலைவாதி. இலங்கைக்கு வருவதிலும் இங்குள்ள பெண்களுடன் நட்பு கொள்வதிலும் மிகுந்த ஆசை கொண்டிருந்தார்.அவர் இங்குள்ள யாராவது பெண்களுக்கு என்று தனது நகைகளை கொடுத்து விடும் பொழுது, அவற்றை உடனடியாக விற்க வேண்டாம் என்றும் பெண்கள் அணிந்து பார்த்த பின்னர் விற்று பாவிக்கும் படியும் ஒரு கடிதமும் கொடுத்து விட்டிருந்தார். கற்பதற்கு உதவவும் அவர் விரும்பியிருந்தார். மேலும், தான் இளவயதில் தமிழ் கற்பதற்கு ஒரு முஸ்லீம் நண்பர் உதவியதாகவும், அவ்வகையில் யாராவது ஒரு முஸ்லீம் பெண்ணுக்கும் இந்த நகைகளை அணிய கொடுக்கும்படி கேட்டிருந்தார்.
அந்த வகையில் அவரது வெள்ளி நகைகளை விற்று வந்த பணத்தில் பாதியை மன்னார் றுநு ஊயுN ஊசநயவந துழடி அமைப்பிற்கும், மற்ற பாதியை எழுவாள் சமூக மாற்றத்திற்கான பெண்களின் கல்விக்கும் பயன்படுத்துகின்றோம்.
மீனாவின் ‘வெள்ளி’ கொண்டை ஊசிகள் ‘நீதிக்கான பறை’ அறையும் பெண்களும், பெண்ணிலைவாதியும் தமிழ் கவிதாயினியுமாகிய ஒரு முஸ்லீம் பெண்ணும் அணிகின்றனர்.
மீனாவுக்கு அன்புகளுடன்...
மேற்படி தகவல்களுக்காகவும் ஆதரவுக்காகவும் சமதை பெண்நிலைவாத நண்பிகள் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி. அமைப்பின் வளாகத்தில் அமைந்திருக்கும் அமைப்பின் கடைக்காக இவ் அன்பளிப்பு செலவிடப்படுகிறது.
மீனாவுக்கு அன்புகளுடன்
-மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர்-
மனங்களைப் போலவே சுவர்களையும் கனவுகளால் நிரப்புதல்
31.08.2020: வளாகத்தில் அமைந்த மண்டப சுவர்களில் ஓவியங்கள் வரைந்தோம்.
ஊருக்கு நூறு பலா செயல் திட்டம்
25.07.2020: Lions club of Panadura Centennial எமது மாற்;றுத்திறனாளிகள் அமைப்பின் சூழல்நேய செயல் திட்டமான ஊருக்கு நூறு பலா ஆரம்ப நிகழ்விற்கு நல்லாதரவை வழங்கினர். லயன்ஸ் கிளப் இன் பங்காளர்கள் எமது வளாகத்திற்கு நேரில் வருகை தந்தனர். அமைப்பின் உறுப்பினர்களும் வேட்டையாமுறிப்பு கிராமத்தின் கிராம மட்டத் தலைவர்களும் கிராம அலுவலரும் இன்றைய நிகழ்வி;ல் பங்குபற்றினர். நிகழ்வு குறித்த உரைகள் நிகழ்த்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளால் பாடல்கள் இசைக்கப்பட்டன. நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பலாக்கன்றுகள் வழங்கிய மதிப்பார்ந்த லயன்ஸ் கிளப் நண்பர்கள் மொத்தமாக 600 கன்றுகளை வழங்கினர். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தளவு கன்றுகளை அவர்களின் வீட்டுத்தோட்டத்தில் உற்பத்தி செய்து எமக்காகச் சேகரித்து எடுத்து வந்து அன்பளித்தனர்.
சர்வோதயமும் கைகோர்த்த வெற்றிப் பயணத்தில்....
20.07.2020. மன்னாரில் இயங்கும் சர்வோதய நண்பர்கள் எமது மாற்றுத்திறனாளிகள் அமைப்புடன் மரக்கறி விதைகளை வழங்கியும் தன்னார்வத் தொண்டர்களாக எம்முடன் பயணிக்க விரும்பியும் வளாகத்திற்கு வருகை தந்திருந்த மகிழ்ச்சியாக தருணங்களில்.....
சுய உதவிக் குழுக்களுடன் சந்திப்பு
17.06.2020 அன்று அமைப்பின் தலைமைக்குழு, அமைப்பின் கீழ் இயங்கும் சுய உதவிக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி ஆதரவு நல்கிவருகின்ற வொய்ஸ் நிறுவனத்தின் இணைப்பாளர்கள் ஆகியோருடனான சந்திப்பு தொழில்கூடத்தில் நடைபெற்றது.
உப்பில்லாக் கருவாடு உற்பத்தி நிலையம் திறப்பு
01.07.2020 - எமது மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகளின் அமைப்பினை வலுப்படுத்தி நிற்கும் சுய உதவிக் குழுக்களில் ஒன்றான மலரும் மொட்டுகள் அமைப்பு உப்பில்லாக் கருவாடு உற்பத்தி நிலையத்தை இன்று திறந்து வைத்தது. டெவ்லின் நிறுவனத்தின் நிதியாதரவோடு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் டெவ்லின் அமைப்பினரும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினரும் சுய உதவிக் குழுக்களும் கிராமத்து மக்களும் கலந்து கொண்டனர். சுய உதவிக் குழுக்களுக்கான ஊக்குவிப்புத் தொகைகளும் வழங்கப்பட்டன.
உப்பில்லாக் கருவாடு வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்க 0771441473 / 0774051473
அமரர் உமாபதிதேவி அவர்களின் நினைவு நாள்
20.06.2020 அன்று அமைப்பின் உறுப்பினர்களும் தொண்டர்களும் கலந்துகொண்ட அமரர் உமாபதிதேவி அவர்களின் நினைவு நாளின் சில தருணங்கள்
மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள
எமது தொழில் கூடத்தில் விளக்குமாறு உற்பத்திப் பணிகள் தொடர்கின்றன. தாமே காட்டில் தடிகள் வெட்டி, உள்ளுர் மக்களிடம் ஈர்க்கு விலைக்கு வாங்கி, இதர பொருட்களை சேகரித்து மாற்றுத்திறனாளிகளே தயாரிக்கிறார்கள்.
மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள நாடுங்கள்
மினுக்கன், அடம்பன், மாந்தை மேற்கு, மன்னார்.
சிறிகவியழகன் 0776576807
அன்புநெறியின் கனடா அமைப்பினருக்கு நன்றிகள்
08.06.2020. மாற்றுத்திறனாளிகள் வளாகத்தில் புதிய சிறிய கட்டடம் ஒன்றுக்கான வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. மயூரனின் பொறுப்பில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கான நிதி ஆதரவை நல்கிய அன்புநெறியின் கனடா அமைப்பினரருக்கு மனமார்ந்த நன்றிகள். நிதி கையாள்கை தொடர்பான கணக்குகள் இணைப்பாளரால் முறைப்படி பேணப்படுகின்றன.
24.05.2020 தொழில் கூடத்தில் விளக்குமாறு உற்பத்தி
விற்பனைக்காக விளக்குமாறுகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகி விட்டன. தாமே பரப்புக்கடந்தான் காட்டிற்குச் சென்று பெரும்பருத்தித் தடிகளை வெட்டிக்கொண்டு வந்தார்கள் கவியழகனும் சந்திரனும். மக்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவும் வகையில் ஈர்க்கில் கொள்வனவு செய்யப்படுகின்றன.
24.05.2020 வளாகத்தில் மாட்டுத்தொழுவம்
மயூரன் அவர்களது தலைமையில் மாட்டுத்தொழுவத்தின் தீவனத்தொட்டி அமைக்கப்படுகிறது.
20.05.2020 திருக்கேதீச்சரம் அன்பளிப்பு
அமைப்பு சார்பான வேண்டுகோளுக்கு இணங்க திருக்கேதீச்சரம் நிர்வாகத்தினர் மாடுகளை அன்பளிப்பாக வழங்கினர். இன்று இரண்டு பசுக்களை வளாகத்திற்கு வரவேற்றோம். எமது வளாகத்தில் வளர்ந்த புற்களைச் சுவைக்கின்றன பசுக்கள்.
உதவி
திறந்த நிலையில் இருந்த தற்காலிக அலுவலகத்தை காற்றுக்கும் மழைக்கும் பாதுகாப்பான முறையில் மறைப்புச் செய்து கொள்ளுங்கள் என்று, தானே முன்வந்து உதவினார் தமிழரசி.
19.05.2020 மரக்கறி விதைகள் வழங்கல்
அமைப்பின் மாற்றுத்திறனாளிகளுக்கு மரக்கறி விதைகள் வழங்கப்பட்டன. இணைப்பாளர் ஜெனிக்கும் தன்னார்வத் தொண்டராக வழங்கலில் ஆதரவளித்த நிர்மலா அவர்களுக்கும் ஓபின் நிறுவனத்தினருக்கும் எமது அமைப்பின் சார்பான நன்றிகள்.
18.05.2020 கச்சான் விதைப்பு
வளாகத்தில் கச்சான் மாதிரி விதைப்பு நம்பிக்கை தருகிறது. ஆகவே இன்று கச்சான் விதைத்தோம். இக்கச்சானை வளாகத்தின் முகாமையாளரான இந்திரா அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்.
18.05.2020 மரக்கறி விதைகள் வழங்கல்
மாற்றுத் திறனாளிகளுக்கான மரக்கறி விதைகள் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப் பட்டன. அமைப்புக்காக இணைப்பாளர் ஜெனியின் வழிப்படுத்தலில், தூரக் கிராமங்களுக்கு விதைகளை எடுத்துச்சென்று வழங்குகிறார் இளவேணி, யூஜினா பொதியிடலில் உதவுகிறார் ஈஸ்வரி. இவ் விதைகளை அமைப்பின் அங்கத்தவர்களுக்காக வழங்கியோர் ஓபின் நிறுவனத்தினர். அந் நிறுவனத்தின் தோழர் கிரேஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம்.
நேர்த்திப் படுத்தல்
பற்றையாக வளர்ந்த இலந்தை மரங்களை அழகுபடுத்தல்.
அழகுற வளாகத்தை அமைத்தலில் சில கட்டங்களை அமைத்து பணிகள் தொடர்கின்றன.
15.05.2020 கானநிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
தயாளலிங்கம் மிதிலாவின் மகள் கானநிலாவின் பிறந்த நாள் இன்று. கானநிலா தனது பிறந்தநாளை எமது மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஊடாக செய்வதற்கு விரும்பினார். இதோ எமது வளாகத்தின் முன் பகுதியில் நிழல்தரு, பழம்தரு, குருவிகளின் வருகைதரு, மர நடுகையும் விசேட தேவையுடைய சிறுவர்களின் மகிழ் தருணங்களும். இந்நிகழ்வை சகல வழிகளிலும் ஒழுங்குபடுத்தி உற்சாகமளித்தார் இளவேணி.
24.04.2020: WE CAN அமைப்பின் கிராமமட்ட சிறு குழுக்கள்
WE CAN மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் கிராமமட்ட சிறு குழுக்களின் வளர்ச்சிக்காக காசோலை வழங்கப் பட்டது. இக்குழுக்களை உருவாக்கி அதனை சுயமாக இயக்கச் செய்யும் முகமாக இத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற Voice அமைப்புக்கும் சியாம் அவர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.
11.05.2020: நிழல் சேவை
காண்டாவன வெய்யில் கொழுத்தி எரிக்கிறது. மாற்றுத் திறனாளிகள் வளாகத்தில் வேலையும் வேகமாக நகர்கிறது. நட்ட மரங்கள் நிழல் தர நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும்.
வேட்டையாமுறிப்பு கிராம அலுவலரிடம் கோரி, இளையோர் அமைப்பின் பந்தல் சேவையை தற்காலிகமாக எமது வளாகத்தில் அமைக்க முடிந்தது.
தனது பிரிவு இளையோர் அமைப்பிடம் இருந்த பந்தல் செற்றை எங்கள் வளாகத்தில் போட்டு விட்டால் உதவியாக இருக்கும். எப்போதெல்லாம் தேவையோ கழட்டிக் கொண்டு செல்லலாம். திரும்பவும் இங்கயே போட்டு விட்டால்....... இளையோர் அமைப்பின் துடிப்புமிக்க தொண்டர்கள் வந்தார்கள். இதோ பந்தல் எங்கள் வளாகத்தில்.
காண்டாவன வெய்யிலைத் தாங்குவதற்கு இப் பந்தலும் பலரின் அன்பாதரவும் சேர்ந்து நிழல் தருகின்றன.
மர நடுகை
மாற்றுத் திறனாளிகள் வளாகத்திற்கு வருகை தரும் மாற்றுத் திறனாளிகள் தம்மால் வழங்கக்கூடிய மரக்கன்றுகளை கொண்டு வந்து வளாகத்தில் நாட்டுகின்றனர். பசுமைப் புரட்சிக்கும் கரம் கொடுக்கும் .
01.05.2020: விண்மீன்கள் அமைப்பின் ஆதரவில் உலருணவு வழங்கல்
மே மாதத்தின் முதலாம் நாள். விண்மீன்கள் அமைப்பின் நண்பர் இசையாளன் அல்லது நியூட்டன் அவர்களது ஆதரவில் மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கான உலருணவு வழங்கி வைக்கப்பட்டது. இசையாளனும் அவர்களது நண்பர்களும் இணைந்து மாற்றுத்திறனாளிகளது வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்ட இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளான நாங்கள் கலந்து கொண்டோம்.
யாழ் இந்து பழைய மாணவர்கள் (1991) ஆதரவில் உலருணவு வழங்கல்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் 1991 இல் உயர்தரத்தில் கல்விகற்ற மாணவர்கள் பலர் திரட்டி வழங்கிய நிதி ஆதரவில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கான 2000 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
31.01.2020: மின் இணைப்பு
வளாகத்திற்கு மின் இணைப்புச் செய்வதற்காக ஒரு கொட்டில் தேவைப்பட்டது. உள்ளுர் தொழிலாளர்கள் ஒரு மாலை வேளையில் கொட்டில் வேலையை நிறைவேற்றினார்கள். மறு காலை மின் இணைப்பு பெறுவதற்கான வயரிங் வேலையை மாற்றுத்திறனாளி சந்திரன் அவர்களது மகனும் அவரது நண்பரும் செய்து முடித்தார்கள். மின் இணைப்பு விரைவாகக் கிடைப்பதற்கு சகல வழிகளிலும் உதவினார்கள் அன்புநெறி ஆலோசகர்களும், எஞ்சினியர்களும், பிரதேச செயலாளரும் மன்னார் மின்சார சேவை அதிகாரி மற்றும் ஊழியர்களும்.
25.01.2020 & 26.01.2020: இகோ வில்லேஜ் (Global Ecovillage Network) பயிற்சியும் செயற்பாடுகளும்
சர்மிளா செய்யித் மற்றும் ட்ரூடி ஜூரியன்ஸ் ஆகிய இரு தோழிகளும் குளோபல் இகோ வில்லேஜ் வலையமைப்பின் பிரதிநிதிகளாவர். எமது அமைப்புடன் தொடர்புகொண்டு பசுமைக் கிராமத்தை கட்டியமைத்தல் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடலை நிகழ்த்தினர். எமது மாற்றுத்திறனாளிகள் வளாகத்தில் இடம்பெற்ற இருநாட் கலந்துரையாடல் பயிற்சியில் மாற்றுத்திறனாளிப் பெண்களும் உள்ளுர் பெண்களும் மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களும் பங்குபற்றினர். நிதி அனுசரணை மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினர் வழங்கியிருந்தனர்.
19-12-2019: மாற்றுத் திறனாளிகள் வளாகம் திறப்பு விழா
பிரதேச செயலாளர் திரு.கேதீஸ்வரன் மற்றும் பிரதேச செயலகத்தினர், அன்னை இல்லத்தின் சார்பாக திரு.நடேசன் அவர்கள், அயலவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்வில் பெயர்ப்பலகை அமைப்பின் தலைவர் திரு.யேசுதாஸன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. வளாகம் அமைப்பின் பொருளாளர் திரு.சதீஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மரநடுகை மேற்கொள்ளப்பட்டது.
13.12.2019: நுழைவாயில் வேலை
காணியில் நுழைவாயில் வேலையில் மயூரன், ரவி ஆகியோர் ஈடுபட்டனர். வேலி அடைத்த கையோடு மழை கொட்டத் தொடங்கியதால் காணியில் வெள்ளம் நிரம்பியது. நீண்ட நாட்கள் காத்திருந்தே நுழைவாயில் அமைக்க முடிந்தது.
தொழில் கூடத்தில்
தொழில்கூட அபிவிருத்திப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளும் தொண்டர்களும்
18.11.2019: தொடர் பணிகள்
பனை மரங்களை கூரைக்கான மரமாக துண்டுபோடுவதற்கான சந்திப்பு மாற்றுத்திறனாளிகள் வளாகத்தில் தச்சுவேலைக்கான ஒப்பந்தகாரர் ராசுவுடன் நடைபெற்றது.
15.11.2019: முட் பற்றைகள் துப்பரவு
மயூரனின் அணியினர் தூண்கள் போடும் வேலையை ஆரம்பித்தனர். இந்திரா, சாருஜன், கோமகன் ஆகியோர் காணியில் வேலை செய்தார்கள். காணியில் கிடந்த முட்கள் பொறுக்கப்பட்டு மரங்களின் கீழ் நின்ற முட் பற்றைகள் துப்பரவு செய்யப்பட்டன.
14.11.2019: பொருட்கள் காணியில்
கல், மணல், சல்லி, தூண்கள் என்பவை காணியில் இறக்குவதற்கான வேலைகள் ஆரம்பமாகின. மகேசன் அவர்களை நேரில் சந்தித்து அவரது யாட் இல் பொருட்களுக்கான செலவு விபரங்கள் கலந்துரையாடி பொருட்கள் காணியில் இறக்கப் பட்டன.
13.11.2019: பொருட்கள் இறக்கப்பட்டன
மன்னாரில் கொள்வனவு செய்தபடி இருந்த பொருட்கள் இன்று காணிக்குக் கொண்டுவரப்பட்டன. சிமென்ற், கம்பி ரோல்கள், நெற் ரோல்கள், இதர பொருட்கள் அனைத்தும் இந்திரா, வெற்றிச்செல்வி, ஜெபநேசன் ஆகியோரால் இறக்கி பக்கத்து வீட்டு நிலானியின் வளவிலும் வீட்டிலும் அடுக்கப்பட்டன.
29.10.2019: வெள்ளம்
மழை வெள்ளம் காரணமாக வேலி வேலையை ஆரம்பிக்க முடியாத நிலைவரம்.
13.10.2019: காணியில் துப்பரவுப் பணிகள்
இன்று பகல் முழுவதும் காணியில் பற்றைகள், மரங்கள் துப்பரவுக்கான ஜே.சி.பி. வேலை நடைபெற்றது.
10.10.2019: செயற்குழு கலந்துரையாடல்
எமது அமைப்பின்மினுக்கன் தொழிற்கூடத்தில் செயற்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது.
08.08.2019: அன்னை இல்லம் காணியை பார்வையிடல்
அன்னை இல்லத்தைச் சேர்ந்த இராமகிருஸ்னண் ஐயா, பிருந்தாவனநாதன் ஐயா, நடேசன் ஐயா, சூரியகுமார் ஐயா ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் வளாக காணியை பார்வையிட்டனர். நிதி அனுசரணை வழங்குவதில் எமக்கு பக்கபலமாக நின்று ஒத்துழைக்கின்றனர் அன்னை இல்லம் அமைப்பினர்.
02.08.2019: காணிக்கான வேலி அமைப்பு கலந்துரையாடல்
அடம்பனில் அமைப்பின் தலைவர் யேசுதாஸ் அவர்களின் கடையில் மாற்றுத்திறனாளிகள் வளாகம் தொடர்பான சந்திப்பு நடைபெற்றது. யேசுதாஸ், யேசுராஜா, கவியழகன், மேரி யூஜினா, யூடிற் ராஜி, வெற்றிச்செல்வி ஆகியோர் காணிக்கான வேலி அமைப்பு தொடர்பான கலந்துரையாடல்.
காணி நீண்டகால குத்தகை அடிப்படையில்
மாற்றுத்திறனாளிகள் வளாக காணி துப்பரவு தொடர்பாக பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் அவர்களுடன் கலந்துரையாடினர். அன்புநெறி அமைப்பின் தொண்டர் மொறாயஸ் அவர்களும் தொலைபேசி ஊடாக பிரதேச செயலாளருடன் கலந்துரையாடினார்.
அமைப்புக்காக ஒதுக்கப்பட்ட காணி நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதற்கான நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் நடந்தது.
விளையாட்டுப் போட்டி
06.11.2019 அன்று மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி மாந்தைமேற்கு பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச செயலாளர் திரு.கேதீஸ்சரன் அவர்களின் தலைமையில் சமூக சேவைகள் பிரிவு மற்றும் வொய்ஸ் அமைப்பினரின் முழு ஆதரவோடு முன்னெடுக்கப்பட்ட விளையாட்டுப் போட்டியில் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
24.04.2019: காணி ஒரு ஏக்கர் கிடைத்தது
24.04.2019 அன்று மாற்றுத்திறனாளிகள் வளாக காணி தொடர்பாக வெற்றிச்செல்வி, பிரதேச செயலாளருடன் கலந்துரையாடினார். அன்றே காணி கோரல் கடிதம் அமைப்பின் தலைவரது ஒப்பத்துடன் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டது. கிராம அலுவலர் யூடிற்றா அவர்களுடன் பிரதேச செயலாளரால் கலந்தாலோசிக்கப் பட்டது. பிரதேச செயலாளரின் கட்டளையின் பிரகாரம் கிராம அலுவலர் யூடிற்றா, காணிக்கிளை அதிகாரிகள் ஜெகன், ரமேஸ் ஆகியோர் காணியை அளப்பதற்காக வந்தார்கள். காணி அளக்கப்பட்டு அளவுத்திட்டம் குறித்த எழுத்து ஆவணம் தயாரிக்கப்பட்டு அமைப்பினரிடம் கையளிக்கப்பட்டது.