மாற்றுத் திறனாளிகள் நிலையான அபிவிருத்தி அடைந்து தற்சார்பு பொருளாதாரத்தில் வாழ நீங்களும் உதவலாம். தொடர்புக்கு WE CAN @ 077 6576 807 | wecancj@gmail.com
WE CAN மாற்றுத் திறனாளிகள் அமைப்பானது, மாந்தைமேற்கு மாற்றுத்திறனாளிகளால் 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டு, மாகாணத்திலும் மத்திய அரசிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 11 மாற்றுத்திறனாளிகள் செயற்குழு உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். இவர்களே இயக்குனர் சபை என அறியப்படுகின்றனர்.
உயர்ந்த சமூக வாழ்வை மாற்றுத்திறனாளிகளும் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் தொடர்பான விடயங்களை உகந்த வகையில் கவனம் கொள்ளச் செய்வது, மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுதல், மருத்துவ ஆதரவை பெற்றுக் கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளின் எதிர்காலம் குறித்து நிலைபேறான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டங்களை முன்வைப்பதும் அவற்றை முன்னெடுத்துச் செல்வதும் அமைப்பின் கடமைகளாகும்.
இதற்கான ஆலோசனைச் சபையானது பிரதேச செயலாளர், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவைகள் உத்தியோகத்தர், வடமாகாணம், உட்பட அமைப்பின் பதவிநிலை உத்தியோகத்தர்களைக் கொண்டதாகும்.
தொலை நோக்கு | VISION
வாழ்க்கைத் திறன்களைப் பெற்று தன்னம்பிக்கை உடையவர்களாய் உருவாகும் மாற்றுத்திறனாளிகள் சமூகம்
பணிக்கூற்று | MISSION
கல்வி, விளையாட்டு, வாழ்வாதாரம் நலனோம்பு என்பவை தேவையானளவு கிடைத்திருக்கும் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல்
முக்கிய தொடர்பாளர்கள்
திருவாளர் கேதீஸ்வரன் - பிரதேச செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலகம்
திரு.யோகீஸ்குமார் - அபிவிருத்தி உத்தியோகத்தர், மாந்தை மேற்கு பிரதேச செயலகம்
திருமதி அஜந்தா - சமூக சேவைகள் உத்தியோகத்தர், மாந்தை மேற்கு பிரதேச செயலகம்
வெற்றிச்செல்வி சந்திரகலா - அமைப்பாளர், WE CAN மாற்றுத் திறனாளிகள் அமைப்பு
சின்னப்பு யேசுதாசன் - தலைவர், WE CAN மாற்றுத் திறனாளிகள் அமைப்பு
ஸ்ரீ கவியழகன் - செயலாளர், WE CAN மாற்றுத் திறனாளிகள் அமைப்பு
தொடர்புகளுக்கு: